லண்டனில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.!

Published By: Robert

18 Apr, 2018 | 12:15 PM
image

உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தாய்நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்தார்.

தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்விமான்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லை என தெரிவித்தார்.

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிப்பதே இதற்கான முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் செயற்படவில்லை எனவும் தெரிவித்தார். 

கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளக்கூடிய சகல பொறுப்புக்களையும் உயரிய மட்டத்தில் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதென வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, நாட்டில் நிலவும் அமைதியான சூழலை நிரந்தரமாகப் பேணுவதற்கு முன்னுரிமையளித்து தமது அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வதோடு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார திட்டங்களினால் தற்போது சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதுடன், நாட்டுக்கெதிராக காணப்பட்ட சர்வதேசத்தை மீண்டும் நாட்டை நோக்கி கொண்டுவர முடிந்துள்ளமையானது கடந்த மூன்று வருடங்களுக்குள் பெற்றுக்கொண்டுள்ள முக்கிய வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15