எதற்காக மத்தளயில் தரையிறங்கியது மிகப்பெரிய விமானம் 

Published By: Priyatharshan

18 Apr, 2018 | 11:49 AM
image

மத்தள விமான நிலையத்தில் உலகின் மிகப் பெரிய விமானம் ஒன்று இன்று காலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

அன்டநோவ் ஏ.என்.-225 மிரியா ( Antanov An-225 Mriya) என்ற உலகின் மிகப்பெரிய விமானமே மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும் விமானக் குழுவினர் ஓய்வெடுத்துக்கொள்வதற்காகவும் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வந்துள்ளதாகவும் அது புறப்படும் நேரம் தற்போதுவரை திட்டமிடப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அன்டனோவ் ஏ.என். 225 மிரியா  என்பது மூலோபாய நோக்கங்களிற்காக பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட விமானமாகும்.1980 களில் சோவியத்யூனியனின் ஒரு பகுதியாக விளங்கிய உக்ரைனின் அன்டனோவ் வடிவமைப்பு பணியகம் இந்த வகை விமானங்களை உருவாக்கியிருந்தது.ஆறு டேர்போபான்கள் மூலம் இந்த விமானம் இயங்குகின்றது. 640 தொன்பொருட்களுடன் பயணிக்க கூடிய இந்த விமானமே உலகின் அதிக எடைகூடிய விமானம் என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33