2019 பொது­ந­ல­வாய உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களின் மாநாடு இலங்­கையில்

Published By: Robert

18 Apr, 2018 | 10:12 AM
image

பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­ற உறுப்­பி­னர்­களின் அடுத்த மாநாட்டை   2019ஆம் ஆண்டு இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் அடுத்த வரு­டத்­துக்­கான மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட்டின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் செயற்­குழு கூட்­டத்­திலே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

பொது­ந­ல­வாய மாநாட்டின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் செயற்­குழு கூட்டம் கடந்த 13ஆம் திகதி இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம், அடுத்த வருட மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு ஒன்­றி­யத்தின் இணக்­கப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2017ஆம் ஆண்டு மோல்ட்டா நாட்டில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா, 2019 ஆம் ஆண்டில் இடம்­பெ­றக்­கூ­டிய மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார். 

அமைச்­சரின் வேண்­டு­கோளை பரி­சீ­லனை செய்த குறித்த ஒன்­றியம் அதற்­கான அனு­ம­தியை தற்­போது வழங்­கி­யுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட்டு நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் மாநாடு ஆசிய நாடொன்றில் இடம்பெற இருப்பது இதுவே முதல் தடவையாகும். உலகில் 10 வலயங்களை மத்திய நிலையங்களாகக்கொண்டு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04