கட்­சியின் பத­வி­க­ளுக்கு வரப்­போ­கின்­ற­வர்கள் யார் ?

Published By: Robert

18 Apr, 2018 | 09:52 AM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குழு மீண்டும் நாளை வியா­ழக்­கி­ழமை கூட­வுள்­ளது. இதன்­போது கட்­சியின் பத­வி­க­ளுக்­காக புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள்  என தெரி­ய­வ­ரு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை யில் அல­ரி­மா­ளி­கையில் மறு­சீ­ர­மைப்பு குழு கூட­வுள்­ளது.  இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தான பத­வி­களில் மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

 இதன்­படி கட்­சியின் தவி­சாளர், பொதுச்­செ­ய­லாளர், பொரு­ளாளர் ஆகிய பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். 

 தற்­போது குறித்த பத­வி­களில் இருப்­ப­வர்­களின் பத­விக்­காலம் இம்­மாதம் 30 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றது. எனினும் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணி­க­ளுக்கு மதிப்­ப­ளித்து தவி­சா­ள­ராக இருந்த அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ர­மவும் பொதுச்­செ­ய­லா­ள­ராக இருந்த அமைச்சர் கபீர் ஹாஷிமும் பத­வி­களில் இருந்து இரா­ஜி­னாமா செய்­தனர். 

இத­னை­ய­டுத்து கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் தெரி­வான மறு­சீ­ர­மைப்பு குழு கடந்த 11 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூடி ஆராய்ந்­தது. 

இதன்­போது பொதுச்­செ­ய­லாளர் பத­வியின் அதி­கா­ரங்­களை பகிர்ந்து மூன்று செய­லாளர் பத­வி­களை உரு­வாக்­கு­வது குறித்து கலந்­தா­லோனை செய்­யப்­பட்­டது. இதற்கு அனை­வ­ரதும்  ஆத­ரவும் கிடைக்­க­பெற்­றது. இதன்­பி­ர­காரம் ஊடக செய­லாளர், பிர­சார செய­லாளர் மற்றும் தொழிற்­சங்க செய­லாளர் ஆகிய புதிய பத­வி­களை  உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வி­க­ளுக்கு மூவரின் பெயர்கள்   பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன.   ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு சிலர் அகில விராஜ் காரி­ய­வசம் பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றும் நடந்து முடிந்த கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போது பெரும்­பா­லானோர் முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரை பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்க வேண்டும் என்றும் கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கவை பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்க வேண்டும் எனவும்   பரிந்­துரை செய்­துள்­ளனர். 

  கடந்த புதன்­கி­ழமை நடந்த மறு­சீ­ர­மைப்பு குழு கூட்­டத்தில் பத­வி­க­ளுக்­கான பெயர்கள் குறித்து கலந்­தா­லோ­சனை செய்­யப்­ப­ட­வில்லை.  நாளை வியா­ழக்­கி­ழமை நடக்­க­வுள்ள மறுசீரமைப்பு குழு கூட்டத்தின் போது கட்சியின் பதவிகளுக்கான பெயர்கள்   அறிவிக்க கூடும் என தெரியவருகின்றது. எனினும் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைத்து தீர்மானித்த பின்னர் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17