(இரோஷா வேலு) 

பொரளை சீவாலி வீதிக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் இன்று பிற்பகல் வேளையில் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீவாலி வீதிக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் இன்று பிற்பகல் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதன்போது 69 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரை கைதுசெய்யும் வேளையில் அவரிடமிருந்து 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து குறித்த சந்தேகநபர் இன்று மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.