ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எவரும் ஊகங்களை வெளியிடத் தேவையில்லை ; சீனா

Published By: Priyatharshan

17 Apr, 2018 | 04:53 PM
image

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும்  என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையென சீனா தெரிவித்துள்ளது.

இதனை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுனிங் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத்தளமாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் பரஸ்பர நன்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் துறைமுகத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்துள்ள அவர் இந்த திட்டம் சிறப்பான விதத்தில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வது குறித்து இரு நாடுகளும் உறுதியாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து ஊகங்களை சிலர் வெளியிடவேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16