பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று அவரை ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர் வரும்  23ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞான சார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.