வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ச. தணிகாசலம் தெரிவாகியுள்ளார்.

 

இன்று காலை 10 மணியளவில் நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில் வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் பதவிக்கு ச.தணிகாசலம் (தமிழரசுக்கட்சி) ஜெ.ஜெயரூபன் (தமிழர் விடுதலைக் கூட்டனி) போட்டியிட்ட நிலையில் இருவரும் சமமான வாக்குகளை பெற்றமையால் குலுக்கல் மூலம் ச. தணிகாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதேவேளை உபதலைவருக்காக போட்டியிட்ட நா.யோகராசா ( தமிழரசுக்கட்சி) காமினி விக்கிரமபால ( பொதுஜன பெரமுன) ஆகியோரில் நா. யோகராசா வெற்றியீட்டியுள்ளார். இதன் மூலம் வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக கைப்பற்றியுள்ளது.

கடும் போட்டிக்கு மத்தியில் தவிசாளர் பதவியிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் இரு தரப்பினருக்கும் சமனாக 11வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில் குலுக்கல் சீட்டின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதாசிவம் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.