இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக்போத்தஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் நிக்போத்தஸ் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அணியுடனான வியக்கத்தக்க இரண்டு வருடங்களின் பின்னர், ஏனைய வாய்ப்புகளை நோக்கி நான் செல்வதற்கான பொருத்தமான தருணம் இதுவென கருதுகின்றேன்.

நான் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கான வாய்ப்பை இது வழங்கும். எனக்கு இந்த விசேட வாய்ப்பை வழங்கியதற்காக இலங்கை கிரிக்கெட்டிற்கு  நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, எனது சக பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இறுதியாக இலங்கை அணியை மிகவும் உணர்வுபூர்வமாக நேசிக்கும் இலங்கை ரசிகர்களிற்கு எனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக நான் நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

இலங்கையுடன் இணைந்திருந்தமை கௌரவத்திற்கும் பெருமைக்கும் உரிய விடயம், இதன் மூலம்  ஒரு பயிற்றுவிப்பாளராக கற்றுக்கொள்வதற்கும் என்னை மேம்படுத்துவதற்குமான வாய்ப்பும் மிகவும் திறமையான வீரர்களிற்கு பங்களிப்பு செய்வதற்குமான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

இதற்கு எனது இதயத்தில் எப்போதும் தனியான இடமிருக்கும் என நிக்போத்தஸ் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.