முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கிய போதும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி முடியாது போனதால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

குறித்த பிணை நிபந்தனையை நிறைவேற்றிய பின்னர் அவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தால் கரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.