ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாட்டின் உச்சகட்டம்

Published By: Robert

17 Apr, 2018 | 09:35 AM
image

பாரா­ளு­மன்ற    கூட்­டத்­தொடர் மே மாதம்  8 ஆம் திக­தி­வரை  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை  ஜனா­தி­ப­தியின் தன்­னிச்­சை­யான செயற்­பாட்டின் உச்­ச­கட்­ட­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி தனது சிறப்பு அர­சியல் அதி­கா­ரங்­களைக் கொண்டு பாரா­ளு­மன்­றத்தை  ஒத்­தி­வைத்­தாலும் அதற்­கான சரி­யான கார­ணங்­களை குறிப்­பி­டு­வதும் அவ­ரது பொறுப்­பாகும்  என்று  ஜே.வி.பி. யின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான  சுனில் ஹந்­துன்­னெத்தி மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர்  தெரி­வித்­தனர்.

இம்­மாதம் 19 ஆம் திகதி இடம்­பெ­ற­வி­ருந்த பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொடர் எதிர்­வரும்  மே மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் குறிப்­பிடும்போதே  அவர்கள் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்­டனர்.

சுனில் ஹந்­துன்­னெத்தி மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­ப­தியின் விசேட அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தின் கூட்­டத்­தொ­டரை ஒத்­தி­வைக்கும்போது அதற்­கான கார­ணத்­தி­னையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­விப்­பதும் அவ­ரது பொறுப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆனால் ஜனா­தி­பதி தனது விருப்­பத்தின் பேரில் செயற்­பட்­டுள்­ள­துடன், அவ­ரது சார்பில் செயற்­படும் நிர்­வா­கி­களும் தான்­தோன்­றித்­த­ன­மா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.

பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வெற்றி பெற்­றி­ருந்­தாலும் தேசிய அர­சாங்கம் பாரிய விளை­வு­களை எதிர்­கொண்­டுள்­ளது. தேசிய அர­சாங்­கத்தில் இருந்து 16 உறுப்­பி­னர்கள் வெளி­யே­றி­யுள்­ளமை கட்­சி­களின் பல­வீ­னத்­தன்­மை­யினை  வெளிப்­ப­டுத்­து­கின்­றது. தேசிய அர­சாங்கம் பாரிய நெருக்­க­டி­களை எதிர்கொண்­டுள்ள வேளையில் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­தினை ஒத்­தி­வைத்­துள்­ளமை அர­சியல் கட்­சி­களின் மத்­தியில் பல்­வே­று­பட்ட மாறு­பட்ட கருத்­துக்­களை தோற்­று­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி தனது  விசேட அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தும்போது  அதற்­கான கார­ணங்­க­ளை குறிப்­பி­டு­வதும் அவ­ரது பொறுப்­பாக காணப்­ப­டு­கின்­றது. தமது கட்­சியில் காணப்­படும் குறை­பா­டு­களை சீர் செய்­வ­தற்­கான  கால அவ­கா­சத்­தினை ஏற்­ப­டுத்­தவே பாரா­ளு­மன்­றத்­தினை  ஒத்­தி­வைத்­துள்ளார் என்ற சந்­தேகம் தற்­போது எழுந்­துள்­ளது.

தேசிய அர­சாங்­கத்­தை விட்டு வெளி­யே­றிய 16 உறுப்­பி­னர்­களின் அர­சியல் இருப்பு நிலை வியா­ழக்­கி­ழமை வெளிப்­ப­ட­வி­ருந்­தது. அவர்கள் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருடன் ஒன்­றி­ணைந்து எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­வார்­களா, அல்­லது தனித்து  செயற்­ப­டு­வார்­களா என்­பதும் ஜனா­தி­ப­தியின் விசேட  அதி­கா­ரத்தின் கார­ண­மாக பிற்­போ­டப்­பட்­டுள்­ளது என தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் குறிப்­பி­டு­கையில், 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் குழப்­பத்தை தீர்த்­துக்­கொள்ளும் நோக்­கத்­திலே ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற அமர்வை பிற்­ப­டுத்­தினார். ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­யா­னது வன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்­க­துடன் பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாகும். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் குழப்பம் கார­ண­மாக கூட்டு அர­சாங்கம் தொடர்ந்து செல்­ல­மு­டி­யாது. அவர்­க­ளுக்குள் ஏற்­பட்ட பிரச்­சி­னையின் பிரதி பல­னா­கவே பிர­த­ம­ருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையும் கொண்டுவரப்பட்டது. தற்போது பாராளுமன்ற அமர்வும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

சித்திரை புத்தாண்டுக்குப்பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிமீண்டும் கூடும் என்றே பாராளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27