ஜேர்மனியில் பல்வேறு தரப்புக்களை  சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரி 

Published By: MD.Lucias

16 Feb, 2016 | 03:06 PM
image

(ப. பன்னீர்செல்வம்)

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனி சென்றடைந்த ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை பேர்லின் விமான நிலையத்தை வரவேற்கப்பட்டார்.  

விமானநிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியைும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும்  ஜேர்மனி அரசாங்கத்தின் பிரதம மரபுச் சீர்முறை அலுவலர் ஜெர்கன் கிரிஸ்டியன் மேர்டன்ஸ், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம உள்ளிட்ட இலங்கைத் தூதரக அலுவலர்கள் வரவேற்றனர்.

ஜேர்மனியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  ஜேர்மன் அதிபர் அன்ஜலா மேர்கல், சபாநாயகர் பேராசிரியர் நோபட் ஜெமன்ட் மற்றும் ஜேர்மனியின் சமஷ்டித் தலைவர் ஜோகிம் கோர்க் ஆகியோர் உள்ளிட்ட ஜேர்மனியின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.  

இந்த விஜயத்தின்போது ஜேர்மனிக்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக, கலாசார உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்மூலம் ஜேர்மனியுடனான இலங்கையின் வர்த்தக உறவுகள் பெரிதும் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை மறுதினம்  ஜனாதிபதி கைத்தொழிற்துறைக்கான ஜெர்மன் வர்த்தகப் பேரவையில் உரையாற்றவுள்ளார். இதேவேளை ஜேர்மனிக்கான தனது மூன்று நாள் விஜயத்தை பூர்த்தி செய்யும் ஜனாதிபதி   19ஆம் திகதி  ஒஸ்ரியா நோக்கி பயணமாகவுள்ளார். ஒஸ்ரியாவுக்கான தனது இரண்டுநாள் விஜயத்தின்போது ஒஸ்ரிய ஜனாதிபதி ஹெயின்ஸ் பிஸ்கர்   உள்ளிட்ட அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44