சொகுசு பஸ் தீ வைத்து எரிப்பு : வாழைச்சேனையில் சம்பவம்

Published By: Robert

17 Apr, 2018 | 08:44 AM
image

கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள புணானை காட்டுப்  பகுதியில் வைத்து ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸ{க்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளைத் துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று 9.30 மணியளவில் புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன் கூட்டிய ஆசனப்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றி வருவதற்காக  பொலொன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்த வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பஸ்ஸைப் பின் தொடர்ந்து வந்த நால்வர் பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தலைமறைவாகியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் தீவைக்கப்பட்ட சமயம் பஸ்ஸிலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார (வயது 30) மற்றும் அவரது உதவியாளரும் நடத்துனருமான வாழைச்சேனையைச் சேர்ந்த எம். முஹம்மத் (வயது 25) ஆகியோர் தப்பித்துக் கொண்ட நிலையில் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46