ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிரித்தானிய நோக்கி பயணமானார்.

இந்நிலையில், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் இன்று முற்பகல் 11.45 மணியளவில் கத்தார் விமானம் QR-665 யில் டோகாவிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி பிரித்தானிய நோக்கி பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் 10 பேரடங்கிய குழுவினர் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.