பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து 70 மதுபான போத்தல்கள் அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 13.04.2018. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவை கெம்பியன் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு  விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த குறித்த 70 மதுபான போத்தல்களே இவ்வாறு மிட்கப்பட்டுள்ளதாக அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்கேநபரும் மீட்கப்பட்ட மதுபான போத்தல்களும் பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி அட்டன் நீதவான் நீதிமன்றில் அஜராகுமாறு பொலிஸாரால் உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரும் பொகவந்தலாவை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.