இலங்கையர்கள் மற்றும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றலைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. அத்துடன் அதற்கான விழிப்புணர்வையும் பெறுவதில்லை.

தலைச்சுற்றல் என்பது ஒரு அறிகுறி. இது பாரம்பரிய மரபணு குறைபாடுகளால் ஏற்படக்கூடியது. சில விநாடிகள் வரை நீடிக்கும் தலைச்சுற்றல் ஏற்பட்டவுடன் உடனே பாதுகாப்பாக நின்றுவிடவேண்டும் அல்லது அமர்ந்துவிடவேண்டும். வீதியில் பயணிக்கும் போது இது போன்ற தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனே வாகனத்தை இயக்குவதை நிறுத்திவிடவேண்டும். ஏனெனில் இதன் காரணமாக உடல் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு மூளையின் நரம்புகள் கூட பாதிக்கப்படலாம். மூளையில் உள்ள சில நரம்பு மண்டலத்தின் ஏற்படும் சிக்கல்களாலும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

தலைச்சுற்றல் ஏற்பட்டவுடன் காதில் உள் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளால் உடலின் சமநிலையில் மாற்றமும் சமசீரின்மையையும் ஏற்படுகிறது. இதனால் நடப்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழலாம். ஒரு சிலருக்கு மயக்க உணர்வு கூட ஏற்படக்கூடும். அதனால் தலைச்சுற்றல் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல், அதற்குரிய நிவாரணத்தை உடனடியாக பெறவேண்டும். இதனை கவனியாது விட்டுவிட்டால் மீனியர்ஸ் நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடலாம்.

எனவே தலைச்சுற்றல் ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளவேண்டும். பிறகு இவர்கள் சற்று உயரமான தலையணையை வைத்துக் கொண்டு உறங்கவேண்டும். திடிரென்று குனிந்து பொருள்களை எடுக்கக்கூடாது. கழுத்தை உயர்த்தி மேல் நோக்கி அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்கவேண்டும். அதே போல் கழுத்தைத் திருப்பும் போது கவனமாகவும், நிதானமாகவும் திருப்பவேண்டும். நாளாந்த பணிகளை மேற்கொள்ளும் போது தலையின் பயன்பாட்டையும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளவேண்டும்.