இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 27 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

குறித்த 27 மீனவர்களும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கையின் காரைநகர் மற்றும் மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 27 இந்திய மீனவர்களை ஒப்படைக்கும் பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. 

குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சீஜி 401 மற்றும் 402 கப்பல்களில் மீனவர்கள் ஏற்றப்பட்டு இந்திய கடலோர காவல்படையின் 'ராணி கயிதிந்லியு' கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.