ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு தற்காலிகமாக புதிய அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முழுமையான அமைச்சரவை மாற்றமொன்று சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளதுடன், அது வரையில் இந்த புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விபரம் வருமாறு

சரத் அமுனுகம – திறன் விருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சித் துறை அமைச்சர்,  ரஞ்சித் சியாம்பலாபிடிய – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், பைசர் முஸ்தபா – விளையாட்டுத் துறை அமைச்சர், மலிக் சமரவிக்ரம – சமூக வலுவூட்டல், நலன் பேணல், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழில் உறறவுகள் அமைச்சர்.