புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

1. ஹேமகுமார நாணயக்கார - மேல் மாகாணம்

2. கே.சி.லோகேஸ்வரன்  - வடமேல் மாகாணம்

3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க - சப்ரகமுவ மாகாணம்

4. ரெஜினோல்ட் குரே - மத்திய மாகாணம்

5. மார்ஷல் பெரேரா  - தென் மாகாணம்

6. எம்.பி.ஜயசிங்க  - வடமத்திய மாகாணம்

7. பி.பீ.திசாநாயக்க  - ஊவா மாகாணம்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.