சைப்ரஸ் நாட்டில் தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து 7 இலட்சம் ரூபா பண மோச­டி­செய்த பெண்­ணொ­ரு­வரை கைது­செய்­துள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­ வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சைப்ரஸ் நாட்டில் வாகன சாரதி தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து 7 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்தார் என்ற சந்­தே­கத்தில் பெண்­ணொ­ரு­ வரை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் விசேட விசா­ரணை பிரி­வினர் கைது­செய்­துள்­ளனர். சந்தேக நப­ரான குறித்த பெண்­ணுக்கு சாரதி தொழிலை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக 7 இலட்சம் ரூபாவை வழங்கி­விட்டு சைப்ரஸ் நாட்­டுக்கு பாதிக்­கப்­பட்ட நபர் சென்­றுள்ளார். என்­றாலும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட தொழில் கிடைக்­கா­ததால் மீண்டும் திரும்­பி­வந்த குறித்த நபர், அது தொடர்­பாக பணி­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.  முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த தக­வல்­களின் பிர­காரம் விசா­ர­ணை­களை துரி­த­மாக மேற்­கொண்ட பணி­ய­கத்தின் விசேட விசா­ரணை பிரிவு அதி­கா­ரிகள் சந்­தேக நப­ரான பெண்ணை கடந்த 5ஆம் திகதி எப்­பா­வல, மெடி­யாவ சந்தி, தபுத்­தே­கம வீதி, கெசல்­வத்த என்ற முக­வ­ரியில் கைது­செய்­துள்­ளனர். சந்­தேக நப­ரான பெண்ணை கடந்த 6ஆம் திகதி தம்­புத்­தே­கம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது நீதிவான் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரண்டு சரீ­ரப்­பி­ணை­யிலும் பத்து இலட்சம் ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும் அவரை விடு­வித்தார். 

அத்­துடன் நாளை 13ஆம் திகதி மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக மீண்டும் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார். அதே­போன்று சந்­தேக நபரான குறித்த பெண்ணின் வங்­கிக்­க­ணக்­கு­களை பரி­சீ­லனை செய்­வ­தற்கும் நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்ளது. அத்துடன் சைப்ரஸ் நாட்டில் தங்கியிருக்கும் குறித்த மோசடியின் பிரதான சந்தேக நபரை கைதுசெய்வதற்காக பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.