பிர­த­மரை எதிர்த்த 16 பேருக்கு அர­சாங்கம் நிபந்­தனை.!

Published By: Robert

12 Apr, 2018 | 09:36 AM
image

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் புதிய அமைச்­ச­ர­வை­யா­னது நாளை மறு­தினம் 14 ஆம் திக­திக்கு முன்னர் பத­வி­யேற்கும். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்­துடன் இணைய தீர்­மா­னித்தால் அவர்­களை இணைத்துக் கொண்டு தேசிய அர­சாங்கம் தொடரும். ஆனால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யின்­போது பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த ஆறு அமைச்­சர்­களை புதிய அமைச்­ச­ர­வையில் இணைக்­கக்­கூ­டாது என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன  தெரி­வித்தார்.  

பிர­தரை எதிர்த்த சுதந்­திரக் கட்­சியின்  16 பேரும் மீண்டும் வர விரும்­பினால் அவர்கள்  ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளிக்­க­வேண்டும்  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் வாராந்த செய்­தி­யாலர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 அவர் அங்கும் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

கேள்வி: இரண்டு தரப்பு சண்டை முடிந்­து­விட்­டதா?

பதில்: அவ்­வாறு எது­வு­மில்லை. 

கேள்வி: சுந்­திரக் கட்­சியின் 16 பேர் அர­சாங்­கத்தில் இருக்­கக்­கூ­டாது என ஐக்­கிய தேசியக் கட்சி கூறு­கி­றது. அப்­ப­டி­யாயின் என்ன நடக்கும்?

பதில்: இன்று (நேற்று) மாலை  சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­குமா? இல்­லையா? என்­பதை அர­சாங்­கத்­திற்கு அறி­வித்­த­வுடன் அது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும். 

கேள்வி: எப்­போது அமைச்­ச­ரவை மாற்றம் நடக்கும்?

பதில்: 14 ஆம் திக­திக்கு முன்னர் அமைச்­ச­ரவை மாற்றம் நடக்கும். 

கேள்வி: புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­குமா அல்­லது அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு இடம்­பெ­றுமா?

பதில்: புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்கும். குறிப்­பாக விஞ்­ஞான ரீதியில் இலா­காக்கள் ஒதுக்­கப்­பட்டு அமைச்­சுக்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. பல­ரது அமைச்­சுக்கள் மாறலாம். சில­ரது அமைச்­சுக்­க­ளுக்­கன இலா­காக்கள் மாறலாம். இது தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் செய­லா­ளர்கள் ஆராய்ந்து வரு­கின்­றனர். விரைவில் முடிவு எடுக்­கப்­படும்.

கேள்வி: அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையில் மாற்றம் வருமா?

பதில் : அப்­ப­டி­யில்லை. அர­சி­ய­ல­மைப்பின் படி அமைச்­சர்­களின் எண்­ணிக்கை அமையும். 

கேள்வி: அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி என்ன கூறினார்?

பதில்: தேசிய அர­சாங்­கத்தின் நீடிப்பு தொடர்பில் தெ ளிவான தீர்­ம­னத்தை எடுக்­கு­மாறு கூறினார். குறிப்­பாக தேசிய அர­சாங்கம் தொடர வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தேசிய அர­சாங்கம் இல்­லா­விடின் நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. எவ்­வா­ரெ­னினும் சுதந்­திரக் கட்­சியின் முடி­வி­லேயே தேசிய அர­சாங்­கத்தின் நீடிப்பு தங்­கி­யி­ருக்­கி­றது. 

கேள்வி: சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் அமைச்­ச­ரவை கூட்­டத்தை புறக்­க­ணித்­தது சரியா?

பதில்: அவர்கள் புறக்­க­ணிக்­க­வில்லை. தீர்­மா­ன­மொன்று எடுக்­கும்­வரை வராமல் இருந்­தனர் அவ்­வ­ள­வுதான்.

கேள்வி: பெப்­ர­வரி 10 தேர்­தலின் பின்­ன­ரான நெருக்­கடி, நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் பின்­ன­ரான நெருக்­கடி என்­ப­வற்றால் மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். எப்­போ­துதான் நிலை சீர­டையும்?

பதில்: தற்­போது ஒரு தலைமை ஒரு அர­சாங்கம் என்ற ரீதியில் நாங்கள் பய­ணிக்­க­வி­ருக்­கிறோம். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இணைந்து பய­ணிக்க தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கதான் தேசிய அர­சாங்கம் என்ற யோச­னையை முன்­வைத்தார். அதனைத் தொட­ரவே நாங்கள் விரும்­பு­கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 08 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் 10 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­தி­யிந்தால். ஐ.தே.க. மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் வெற்றி பெற்­றி­ருக்கும். அந்த நேரம் பஷில் ராஜ­பக்ஷ நாட்டில் இருக்­க­வில்லை. மஹிந்த ராஜ­பக்ஷ கால்டன் இல்­லத்­திற்கு சென்­று­விட்டார். 

எனவே ஐ.தே.க. வெற்றி பெற்­றி­ருக்கும். ஆனால் அதற்கு மாறாக பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. எனினும் இதன் அருமை சில­ருக்கு தெரி­ய­வில்லை. அத்­துடன் சர்­வ­தேச ரீதி­யிலும் மனித உரிமை உள்­ளிட்ட பல நெருக்­க­டி­களை சந்­தித்தோம். எனவே தேசிய அர­சாங்கம் என்­பது தேவை­யான ஒன்­றா­கவே இருந்­தது. இரண்டு திசை­களில் இருக்­கின்ற கட்­சிகள் ஒன்­றாக இணையும் போது பிரச்­சி­னைகள் வரு­வது சகஜம் தான். நான் சந்­தி­ரக்­காவின் அர­சாங்­கத்­திற்கும் இந்த யோச­னையை முன்­வைத்­தி­ருந்தேன். 

கேள்வி: ரணிலை ஜனா­தி­ப­தி­யாக்­குவோம் என சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டி­ருந்­ததே?

பதில்: ரணிலை ஜனா­தி­ப­தி­யாக்­குவோம் என ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் கூறலாம். ஆனால் நான் அவ்­வாறு கூற மாட்டேன். இந்த நாட்டை முன­னேற்ற வேண்டும் என்­பதே எனது நோக்­க­மாகும். அதற்­கா­கவே நான் போராடிக் கொண்­டி­ருக்­கின்றேன். 

கேள்வி: பிர­தரை எதிர்த்த 16 பேரும் மீண்டும் வர விரும்­பினால் ஏற்றுக் கொள்­வீர்­களா?

பதில்: அப்­ப­டி­யானால் அவர்கள்  ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளிக்­க­வேண்டும். 

கேள்வி: எவ்­வாறு என்று கூற முடி­யுமா? 

பதில்:  அவர்கள்  அது குறித்து கோரிக்கை விடுத்தால் பார்ப்போம். 

கேள்வி: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யி­னூ­டாக மஹிந்­தவின் பலம் அதி­க­ரித்­துள்­ளதா?

பதில்: இல்லை. அவர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைக் கூட வலுவற்றதாக்கி விட்டார். 

கேள்வி: மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாது போய்விட்டதா?

பதில்: அப்படியில்லை. எங்களிடம் 147 பேர் உள்ளனர். எனவே அவசரத்தின்போது ஜே.வி.பி. எமக்கு ஆதரவளிக்கும். 

கேள்வி: சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களும் விலகாவிடின் அவர்களை விலக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? 

பதில்: அவ்வாறு தேவையில்லை என்று  நம்புகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33