16 சு.க.வினரும் இராஜினாமா.?

Published By: Robert

12 Apr, 2018 | 09:33 AM
image

பிர­த­ம­ருக்கு  எதி­ரான  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த   சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  தமது அமைச்சர், இரா­ஜாங்க அமைச்சர் மற்றும் பிர­தி­ய­மைச் சர் பத­வி­களை நேற்று  இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர்.  

நேற்று நள்­ளி­ரவு 12 மணி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இவ்­வாறு  ஆறு அமைச்­சர்­களும்   9   பிரதி மற்றும்  இரா­ஜாங்க அமைச்­சர்­களும்     பிரதி சபா­நா­ய­கரும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம்  தமது  இரா­ஜி­னாமா  கடி­தங்­களை    கைய­ளித்­தனர்.   குறித்த  16 பேரின் இரா­ஜி­னாமா கடி­தங்­க­ளையும்   ஜனா­தி­பதி    ஏற்­றுக்­கொண்­டுள்ளார். 

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்­று­மாலை   விசேட சந்­திப்பு ஒன்றை நடத்­திய    குறித்த     சுதந்­திரக் கட்­சியின்  16 எம்.பி. க்களும்   சந­திப்பின் முடிவில் தமது பத­வி­களை  இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர்.    

 தயா­சிறி ஜய­சே­கர,  சுசில் பிரேம்­ஜ­யந்த, அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, எஸ்.பி. திசா­நா­யக்க, ஜோன் சென­வி­ரட்ன, சந்­திம வீரக்­கொடி  ஆகிய அமைச்­ச­ரவை அமைச்­சர்­களும்  இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான லக்ஷ்மன் யாப்பா அபே­வர்த்­தன, டிலான் பெரெரா, சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே,  சுசந்த புஞ்­சி­நி­லமே, டி.பி. ஏக்­க­நா­யக்க   ஆகி­யோரும்  பிர­தி­ய­மைச்­சர்­க­ளான சுமேதா ஜி. ஜய­சேன, அனு­ராத ஜய­ரட்ன, தாரனாத் பஸ்­நா­யக்க, லக்ஷ்மன் வசந்த பெரெரா மற்றும்   பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால  ஆகி­யோரே  நேற்­றைய  தினம் தமது அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னாமா  செய்­தனர். 

இது தொடர்பில்   சுதந்­திரக் கட்­சியின்  முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர கேச­ரிக்கு நேற்­றி­ரவு கேச­ரிக்கு  கருத்து வெ ளியி­டு­கையில் 

நாங்கள்  தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கி­விட்டோம்.    இன்று இரவு ( நேற்று)  12 மணி­யி­லி­ருந்து   நாங்கள்  நல்­லாட்சி அர­சாங்­கத்தில்  அமைச்­சர்கள் இல்லை.  எமது   இரா­ஜி­னா­மாவை ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  ஏற்­றுக்­கொண்டார்.  அத்­துடன்   தொடர்ந்தும் எங்­களை சுதந்­திரக் கட்­சியில்  இருந்து அர­சியல் செய்­வ­தற்கு ஆசிர்­வ­திப்­ப­தாக கூறினார். நாங்கள் மகிழ்ச்­சி­யுடன்   வெ ளியே­று­கின்றோம்.  அத்­துடன் ஜனா­தி­பதி  வெ ளிநாடு செல்­ல­வுள்ளார். ஜனா­தி­பதி  வெ ளிநாடு சென்று திரும்­பி­யதும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி  தேசிய அர­சாங்­கத்தில் இருக்­குமா என்­பது குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றார். 

இத­னை­ய­டுத்து  இன்று  அல்­லது நாளை    இடம்­பெ­ற­வுள்ள   புதிய அமைச்­ச­ரவை  அமைச்­சர்­களின் பத­வி­யேற்பில்  குறித்த  16  பேரின் பத­வி­க­ளுக்கு   சுதந்­திரக் கட்­சியின் வேறு எம்.பி. க்கள்   நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். 

கடந்த  நான்காம் திகதி  பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான   நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான  வாக்­கெ­டுப்பில் குறித்த   16  எம். பி. க்களும்    பிர­த­ம­ருக்கு  எதி­ராக  வாக்­க­ளித்­தனர். 

எனினும்   பிர­த­ம­ருக்கு எதி­ரான   குறித்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை   தோற்­க­டிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து   பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த   சுதந்­திரக் கட்­சியின் 16 பேரும்   பதவி வில­க­வேண்டும் அல்­லது   பதவி நீக்­கப்­ப­ட­வேண்டும் என்று  வலி­யு­றுத்த ஆரம்­பித்­தனர். 

அத்­துடன் குறித்த  16  எம்.பி. க்களும் தாங்கள்  அமைச்சு பத­வி­களை  கைவிட தயார் என்றும்  அதற்கு ஜனா­தி­பதி     அனு­ம­திக்­க­வேண்டும்  என்றும்    கூறி­வந்­தனர். மேலும்   நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் சுதந்திரக் கட்சியின்   அனைத்து  அமைச்சர்களும் கலந்துகொண்டிருக்கவில்லை. இந்த  பின்னணியிலேயே   நேற்று நள்ளிரவு   16 பேரும் தமது அமைச்சுப் பதவி்களை  இராஜினாமா செய்தனர். 

அதனையடுத்து இன்று  அல்லது நாளை புதிய அமைச்சரவை  அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21