ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இ.போ.ச பைக்கு சொந்தமான பஸ்ஸுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியிலே இன்று  பிற்பகல் 2.30 மணியளவிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வந்த கார் முச்சக்ரவண்டியொன்றை முந்தி செல்ல முற்பட்ட போது ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸுடன்  மோதுண்டே விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும்  விபத்து தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.