பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு...!

Published By: Robert

11 Apr, 2018 | 04:40 PM
image

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வரட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

 விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இரண்டு போகங்கள் எத்தகைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத பிரதேசங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,  இங்கினிமிட்டிய திட்டத்திலுள்ள மிகவும் குறைந்த அளவில் உள்ள நீரைப் பயன்படுத்தி இந்த விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 இதற்கு மேலதிக பயிர்ச்செய்கைக்காக விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க மேலதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சூரிய சக்தியினால் நீர் பம்பிகளை இயக்கி நீரைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம், களை எடுக்கும் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம், இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஆகியனவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56