இன்றைய திகதிகளில் எம்மில் பலரும் அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பலர் வீட்டிற்கு சென்றும் அலுவலகப்பணியைத் தொடர்கின்றனர். இதனால் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் போதிய கவனம் செலுத்துவதில்லை. அத்துடன் நாளாந்த செய்யவேண்டிய நடைபயிற்சி, யோகா அல்லது தியான பயிற்சி, சத்தான காலை உணவு, சீரான இடைவெளியில் போதிய அளவிற்கு தண்ணீர் அருந்துதல் போன்றவற்றை பணிச்சுமையின் காரணமாகவோ அல்லது மன உளைச்சலின் காரணமாகவோ மறந்துவிடுகின்றனர். இவர்கள் நாளடைவில் இதய பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

இதய பாதிப்பினை கண்டறிவதற்கு தற்போது 700 Slice C T Scan Angio என்ற நவீன கருவிகள் அறிமுகமாகியிருக்கின்றன. இதன் மூலம் ஓஞ்சியோ கிராம், ஓஞ்சியோ பிளாஸ்ரி போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளின் இதய பாதிப்பு சீரமைக்கப்படுகின்றன. ஒரு சிலருக்கு அவர்களின் இதய தமனியின் சுவர் பகுதியில் சுண்ணாம்பு கற்கள் படிந்திருக்கும். இதனை தற்போது  drilling angioplasty என்ற சிகிச்சையின் மூலம் அந்த கற்களை உடைத்து உறிஞ்சி அகற்றப்படுகின்றன. அதே போல் இதயத்துடிப்பில் ஏதேனும் சமச்சீரற்றத்தன்மை ஏற்பட்டாலும் அதனை எலக்ட்ரோ பிசியாலஜி என்ற புதிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்படுகின்றன.

டொக்டர் மாதவன்.

தொகுப்பு அனுஷா.