தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டுமா என்ற விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள்  பாரிய கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.

பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தங்களிற்கு அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் பிரதமரிற்கு சார்பாக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் மத்திய குழுவின் கூட்டம் முடிவடைந்துள்ளது.