இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் இன்று  காலை இந்தியப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதலின் போது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில் காஷ்மீர் பகுதியெங்கும் பாதுகாப்பின் நிமித்தம் இராணுவத்தினர் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை பாகிஸ்தானிய இராணுவம் காஷ்மீரின் இந்திய எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாதிகளின் தாக்குதல்களும், பாகிஸ்தான் இராணுவத்தின் எல்லை மீறலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இம் மாதத்திற்குள் மட்டும் 12 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.