பிரதான சாட்சியாளர் ஒருவரின் மனைவிக்கு ஆயுதம் தரித்த குழுவொன்றால் அச்சுறுத்தல்

Published By: Robert

11 Apr, 2018 | 10:38 AM
image

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படு கொலைகள் தொடர்பில் பிரதான சாட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் பந்துல லியனாரச்சி என்பவரின் மனைவிக்கு ஆயுதம் தரித்த கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு பாதுகாப்பு விதிவிதானங்களுக்கு அமைய உடன் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்க  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டார். 

இது குறித்து சாட்சியாளரின் மனைவியால் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிபத்கொடை பொலிஸாரிடமிருந்து அது தொடர்பில் தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான்  இதன் போது மேலும் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 இல் இடம்பெற்ற கலவரத்தின் போது, சில கைதிகள் தேர்ந்தெடுத்து கொல்லப்பட்ட  விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி சேனக நீதிமன்றில் முன்வைத்த விடயத்தை ஆராய்ந்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

நேற்றைய தினம் மன்றில் ஆஜரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர்  நுவன் அசங்க, தலைமை யிலான குழுவினர் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக நீதிவானுக்கு அறிவித்தனர்.

இதன்போது மன்றில் கருத்துக்களை முன்வைத்த பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி சேனக,  பிரதான சாட்சியா ளர்களில் ஒருவரான பந்துல லியனாரச்சியின் மனைவிக்கு ஆயுதம் தரித்த குழுவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அது தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் கூறினார். 

பல வருடங்களின் பின்னர் சாட்சிகளில் தங்கியுள்ள இந்த கொலை விவகாரங்கள் தொடர்பில் சாட்சியாளர்களை அச்சுறுத்தி வழக்கை திசைதிருப்ப முயற்சிகள் இடம்பெறுகிறதா என   இவை சந்தேகம் கொல்லச் செய்வதாகவும் அதனால் இது தொடர்பில் நீதிவானின்  கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் அவர் அறிவித்தார். இதனையடுத்தே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முதலாவது சந்தேகநபரான பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, மகசின் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகரும் சிறைச்சாலை ஆணையாளர்களில் ஒரு வருமான இரண்டாம் சந்தேகநபர் எமில் ரஞ்சித் லமாஹேவா ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ, அசித் சிறிவர்தன ஆகியோர் சந்தேக நபர்களுக்கு எதிராகத் தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் கொலை அல்லது சதி குற்றச்சாட்டு சுமத்த போதிய ஆதாரங்கள் இல்லை என வாதிட்டனர். அத்துடன் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு முன்னரேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

 இது குறித்து எழுத்து மூல வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க, குற்றம் தொடர்பில் சந்தேக நபரை கைதுசெய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனை அவசியம் இல்லை என சுட்டிக்காட்டினார்.

 அதன்படி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த கொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறைச்சாலைகளின் பிரதானியாக இருந்தவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் சுட்டிக்காட்டியது.   இந்திக சம்பத் எனும்  சிறை அதிகாரி, சிறை படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக இருந்த பி.டி. கொடிப்பிலி  ஆகியோரே இவ்வாறு தப்பிச் சென்றுவிட்டதாக அவர்கள் நீதிவானுக்கு தெரிவித்தனர்.

27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேகநபர்களாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ, அப்போது மகசின் சிறைச்சாலையின் அத்தியட்சகராக இருந்த தற்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர்களில் ஒருவரான (புனர்வாழ்வு) எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர்  சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.இவர்கள் இருவருக்கும் எதிராக  பொது இலக்குடன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை, கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. தண்டனை சட்டக் கோவையின்  32 ஆம் அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 102,113(ஆ),198,296,358 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன்போது நீதிமன்றில் விசேட கோரிக்கையை முன்வைத்த சந்தேக நபர்கள் சார்பு சட்டத்தரணிகள், கைது செய்யப்பட்ட இருவரும் அரச ஊழியர்கள் என்பதால் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதனால் அவர்கள் இருவரையும் சட்ட மனநல  நிபுணர் ஒருவரிடம் முன்னிறுத்தி அறிக்கைப் பெற உத்தரவிடுமாறும் அவர்கள் கோரினார். இந் நிலையில் அதற்கும் அனுமதி வழங்கிய நீதிவான் அவ்வறிக்கையைப் பெற்று சமர்ப்பிக்க சிறை ஆணையாளருக்கு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் விசேட விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிவான் ஆலோசனை வழங்கினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58