கோத்தா ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்குவாரா..? இதோ அதிரடி முடிவு

Published By: Robert

11 Apr, 2018 | 09:46 AM
image

௨௦௨௦ இல் இடம்பெறவிருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்குத் தயார் என்றும், அதற்­காக அமெ­ரிக்க குடி­யு­ரி­மை யைக் கைவி­டுவேன் என்றும்  முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

 ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வி­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.  அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக பேசப்­ப­டு­கி­றது.  ஜனாதிபதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி ­டு­வது பற்றி யாரேனும் உங்­களை அணு­கி­னார்­களா?

பதில்: இல்லை. ஆனால், பேசப்­ப­டு­கி­றது. அது­பற்றி முடிவு செய்­வ­தற்கு இன்­னமும் ஒன்­றரை ஆண்­டுகள் இருக்­கின்­றன என்று நான் நினைக்­கிறேன். அது முன்­னாள் ­ஜ­னா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்­பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய-  பொருத்­த­மான வேட்­பாளர் யார் என்­பது அவ­ருக்குத் தெரியும்.

கேள்வி: தற்­போ­தைய சூழ்­நி­லையில்,  அந்த வகி­பாகம் குறித்து என்ன நினைக்­கி­றீர்கள்?

பதில்: முன்னாள்  ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்­ ஷவை விட, வேட்­பா­ள­ரா­வ­தற்கு பொருத்­த­மா­னவர் வேறு எவரும் இல்லை. மக்கள் ஆத­ர­வையும், பிர­ப­லத்­தையும்,  தற்போ­தைய சூழ்­நி­லையில் தேவைப்­படும் தலை­மைத்­து­வத்தை வழங்கக் கூடிய ஆற்­ற­லை யும் கொண்­டுள்­ளவர் அவர்; அனு­பவம் மிக்­கவர்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்­டத்­தினால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முடி­யாது. அவ­ரது ஆத­ரவைப் பெற்ற எவ­ரேனும் ஒரு­வரால் தான் வெற்றி பெற முடியும்.

கேள்வி: உங்­களை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்தால், அந்தச் சவாலை எதிர்­கொள்­வ­தற்கு, நீங்கள் தயாரா?

பதில்: அவர் அவ்­வாறு நினைத்தால், நான் போட்­டி­யி­டுவேன். அதற்­காக முன்­வ­ருவேன். போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆற்றல் எனக்கு இருப்­ப­தாக நான் நினைக்­கிறேன்.

கேள்வி: அமெ­ரிக்குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளதால், இரட்டைக் குடி­யு­ரிமை உங்­க­ளுக்குத் தடை­யாக இருக்­கி­றது. இதனை எப்­படி தீர்க்கப் போகி­றீர்­கள்?

பதில்: 19 ஆவது திருத்தச் சட்­டத்­தினால் இப்­போது என்னால் போட்­டி­யிட முடி­யாது. இருந்­தாலும், முன்னாள் ஜனா­தி­பதி  என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், இரட்டைக் குடியுரி மையை கைவிடும் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.

கேள்வி: அதற்கான செயல்முறைகள் என்ன?

பதில்:   அது என்னைப் பொறுத்த விடயம். அதற்கான செயல்முறை உள்ளது. அது தெளிவான- குறுகிய நடைமுறை தான் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50