விஜய் அண்டனியின் நடிப்பில் உருவாகியருக்கும் காளி படத்தின் வெளியீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் அண்டனியின் இரட்டை வேட நடிப்பில் உதயநிதி கிருத்திக்காவின் இயக்கத்தில் தயாராகியுள்ள   திரைப்படம் காளி 

திரைப்பட வேலைகள் முடிவடைந்து சில மாதங்களுக்கு முன்னர் வெளிவர வேண்டிய இத் திரைப்படம் வேலைநிறுத்தம் காரணமாக இதன் வெளியீடு தற்காலிகமாக பிற்போடப்பட்டது.

இந் நிலையில் காளி படத்திற்கு வெளியீட்டு தடை விதிக்க வேண்டும் என கோரி விநியோகஸ்த்தர் வில்லியம் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.

வில்லியம் தாக்கல் செய்த மனுவில் 

விஜய் அண்டனி நடித்த அண்ணாத்துறை படத்தை வாங்கி வெளியிட்டதில் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டு விட்டது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனியிடம் பேச்சுவார்த்தை நடாத்தியதில் காளி படத்தின் உரிமையை குறைந்த விலைக்கு தர ஒப்புக் கொண்டு ஐம்பது இலட்சம் ரூபாவை முற்பணமாக கொடுத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டேன் 

ஆனால் தற்போது இப் படத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட நான்கு கோடியே எழுபத்திமூன்று இலட்சம் ரூபாவை செலுத்தி விட்டு படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.

அது வரை மேண்மைத்தங்கிய மன்றம் காளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என குறப்பிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுவை  விசாரித்த உச்ச நீதி மன்றம் காளி படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.