மன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்!!!

Published By: Digital Desk 7

10 Apr, 2018 | 05:07 PM
image

மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று மாலை உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தலைவராக  ஐக்கிய தேசியக்கட்சி  உறுப்பினர்  எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் உப தலைவராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்  எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்  கொன்சஸ் குலாஸ் ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர்.

இதன் போது மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவளித்த நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்றது.

ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்  கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவர் தெரிவின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.இஸ்ஸதீன் மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எம்.தர்சீன் ஆகியோர் முன் மொழியப்பட்டனர்.

அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் 11 வாக்குகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எம்.தர்சீன் 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.இன்சாப்  வாக்களிக்காது நடு நிலை வகித்தார்.

அதி கூடிய வாக்குகளை பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி,  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  எஸ்.வினோ நோகராதலிங்கம், ஹீனைஸ் பாரூக், முத்தலீப் பாரூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27