பலருக்கும் எந்த எண்ணெய் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

இவற்றை எல்லாம் விட, ஒலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்டரோல் தான். கெட்ட கொலஸ்டரோல் , இரத்தத்தில் சேரும்போது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

நம்மில்பல பேருக்கு எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே.

இதோ சில வழிகள்:

* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொரிக்கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம். தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.

* ஒரு முறை பாவித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.

* பிளாஸ்டிக் போத்தலில் எண்ணெய்யை ஊற்றி சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.