இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பொலிவூட் நடிகர் நவாசூதீன் சித்திக்கிடம் பேச்ச வார்த்தை நடைபெற்று வருகிறது.

இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடம் கேட்டபோது,‘இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நவாசூதீன் சித்திக் சாரை மும்பையில் சந்தித்தது உண்மை. படத்தில் அவருடைய கேரக்டரைப் பற்றி எடுத்துச் சொன்னேன். நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் கால்ஷீட் மற்றைய விவரங்கள் உறுதியான பின்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.’ என்றார்.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தால், ‘முதலில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி தான் தெரிவாகியிருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ இயக்குநர் நவாசூதினிடம் பேசியிருக்கிறார் . அவரும் ஒகே சொல்லியிருக்கிறார்.’ என்றனர்.