கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பெறுமதி மிக்க மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்ட சுமார் 8 லட்சம் பெறுமதியான  மரக்குற்றிகளையும், மரக்குற்றிகளை ஏற்றி சென்ற வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியதோடு , சாரதியையும் கைது செய்துள்ளனர்.