மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில்  உயிரிழந்த நிலையில் மீனவர் ஒருவரை சடலமாக இன்று காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்  தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 58 வயதான கணவதிப்பிள்ளை நாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த மீனவர் வழமைபோல மீன்பிடிப்பதற்கு நேற்று  இரவு சென்று வீடு திரும்பாததையடுத்து உறவினர் தேடிய நிலையில் சம்பவதினமான இன்று காலை கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். 

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதான வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக பொலிஸாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிபொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.