அமெரிக்காவில் சமூகவலைதளம் மூலம் நட்பாகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

29 வயதான ஏஞ்சலோ டிரிகோஸா ஜாரா என்பவர் ஒகலகோமா மாநிலத்தில் வைத்தியராக  பணியாற்றி வருகிறார். இவர் இணையதளம் வாயிலாக புளோரிடாவில உள்ள 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

அந்த சிறுமியிடம் தனது வயது 23 என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வீடியோ அழைப்பின்  மூலம் பேசி வந்துள்ளார். அதன்பின்னர்  இருவரும்  ஸ்னாப்சாட் மூலம் பல மணிநேரம் உரையாடியுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல ஆபாசமான புகைப்படங்களை சிறுமிக்கு அனுப்பியுள்ளார் இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி புளோரிடாவுக்கு சென்ற வைத்தியர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு விடுதி ஒன்றில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து திரும்பிய பின்னரும் இவர் தனது உரையாடலை தொடர்ந்து கொண்டு தான் இருந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள புளோரிடா பயணிக்கையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர்கள் உறவு குறித்து அறிந்து கொண்ட தாய் அளித்த புகாரின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான பாலியல் செயல் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

குறித்த வைத்தியர் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற சக மருத்துவ மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.