பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவளித்த 16 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்களும் அடுத்த பாராளுமன்ற அமர்வில்  எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இணைத்தளமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக செயற்படுவதற்கு சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

19 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்துவிட்டோம், உரிய பதிலை எதிர்பார்க்கின்றோம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் ஜனாதிபதிக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.