காத­லியின் நிர்­வாண படங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப் ­போ­வ­தா­கக்­ கூறி அந்த யுவ­தியை அச்­சு­றுத்தி அவ­ளி­ட­மி­ருந்து சுமார் பத்து இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் 21 வயது இளை­ஞ­னையும் அவ­னது தந்­தை­யையும் கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீர்­கொ­ழும்பு குரண பிர­தே­சத்தைச் சேர்ந்த இளை­ஞனும் 45 வய­து­டைய அவ­னது தந்­தை­யுமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

குடும்­பத்தில் ஒரே பிள்­ளை­யான குறித்த 20வயது யுவதி நீர்­கொ­ழும்பு தனியார் கல்­வி ­நி­லை­ய­மொன்­றில் ­கல்­வி ­ப­யின்று கொண்­டி­ருந்த போது 21 வய­து­டைய இளை­ஞ­னு­டன்­ அ­வ­ளுக்­கு­ காதல் தொடர்பு  ஏற்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக சந்­தேக நப­ரான இளைஞர் குறித்த யுவ­தி­யுடன் பல தட­வைகள் பாலியல் உறவை மேற்­கொண்டு வந்­துள்­ள­தா­கவும், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களின் போது அந்த காட்­சி­களை சந்­தேகநபர் தனது கைப்­பே­சியில் பதிவு செய்து கொண்­டுள்­ளமை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.  இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த யுவ­தியின் நிர்­வாண படங்­களை அந்த யுவ­தி­யிடம் காட்டி அவற்றை சமூ­க ­வலைத்தளங்­களில் பதி­வேற்­றப்­போ­வ­தாக பய­மு­றுத்தி சுமார் ஒரு வருட கால­மாக அவ்­வப்­போது அவ்­யு­வ­தி­யி­ட­மி­ருந்து பணம் பெற்றுக் கொண்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் பொலி ஸார் தெரி­வித்­தனர். 

குறித்த யுவ­தியின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்­கி­லி­ருந்தே யுவதி ஏ.டி.எம் அட்­டையை பயன்­ப­டுத்தி பணத் தைப் பெற்று சந்­தேகநப­ருக்கு வழங்­கி­யுள்ளார். பின்னர் யுவ­தியின் தாய் வங்கிக் கணக்கைப் பரி­சீ­லித்த போது அதில் பணம் இல்­லா­தி­ருந்­ததை அவ­தா­னித்துள்ளார். அது தொடர்பில் யுவ­தி­யிடம் கேட்ட போது அனைத்து விட­யங்­க­ளையும் யுவதி தெரி­வித்­துள்­ளார். பின்னர் யுவ­தியின் தாய் இது தொடர்பில் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே குறித்த சந்­தேக நபரும் அவ­ரது தந்­தையும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

சந்­தேக நப­ரினால் தான் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், அதனை மறைப்­ப­தற்­காக சந்­தேக நபரின் வற்­பு­றுத்­தலால் அவ­ருக்கு பணம் வழங்­கி­ய­தாகவும் குறித்த யுவதி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.  இந்த சம்­ப­வத்­திற்கு சந்தேக நபரான இளைஞரின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார் என்ற சந்தேகத்தில் அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.