இலங்­கைக்குள் வரும் அதி­க­ள­வான கறுப்பு பணம்

Published By: Robert

10 Apr, 2018 | 11:40 AM
image

நாட்டில் கறுப்பு பணத்தின் புழக்­கமே வரு­மான வரி­ச்சட்டம்  கடு­மை­யா­ன­தாக அமு­லாக கார­ண­மாகும். கறுப்புப் பணமே  வெளி­நாட்டு முத­லீ­டாக தற்­போது அதி­க­ளவில் நாட்­டுக்குள் வரு­கி­றது. இதன்­படி  அதி­க­ள­வி­லான  கறுப்புப் பணம்  முத­லீ­டாக வந்து வெள்ளை பண­மாக மாற்றும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­றப்­பட்­டுள்­ளமை வருத்­தப்­பட வேண்­டி­யது என தேசிய சுதந்­திர முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. 

நேற்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தான காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் பிரதான செய­லாளர் கபி­ல­க­மகே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

மக்­களை அதி­ருப்­திப்­ப­டுத்­து­வ­தாக அண்­மையில் அர­சாங்­கத்­தினால் அமுல்­ப­டுத்­தப்­பட்ட வரு­மான வரிச் சட்டம் அமைந்­துள்­ளது. கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்   7. 5 வீத­மாக இருந்த பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் தற்­போது 2. 5 வீதத்­தினால் குறைந்­துள்­ளது. எனவே மூன்று  வரு­டங்­க­ளுக்கு முன்பு இருந்த பொரு­ளா­தார நிலை­மை­யுடன் ஒப்­பிட்டு பார்க்­கு­மி­டத்து நாட்டின் பொரு­ளா­தாரம் பின்­னோக்­கியே சென்­றுள்­ளது. 

இந்த வரிக்­கொள்­கை­யூ­டாக உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் உழைக்கும் ஆர்­வத்தை குறைப்­ப­துடன் வெளி­நாட்டு பல்­தே­சிய கம்­ப­னி­க­ளுக்­கான வாய்ப்­பினை அதி­க­ரிக்­கின்­றனர்.  இதனால் பல்­தே­சிய நிறு­வ­னங்­களின் ஆதிக்கம் இலங்­கையில் அதி­க­ரிக்கும். இந்த வரிக்­கொள்­கை­யூ­டாக உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­களே அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். புதிய வரி சட்ட அமு­லாக்­க­லூ­டாக கிடைக்கும் புதிய நன்­மைகள் தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர். காரணம் உல­க­ளா­விய ரீதியில் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பண­மாக்கும் விசேட திட்­டத்தை இலங்கை கையி­லெ­டுத்­துள்­ள­தாகும்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மற்றும் அபிவிருத்திகள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு  சாதகமானதாக அமைய வேண்டும். அதுவே அரசாங்கத்தின் கடப்பாடு  என்பதை நல்லாட்சி மறந்துவிடக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39