கண்டி, ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள், 5 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று காலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மெனிக்கின்ன  பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.