ஜனா­தி­ப­தியே அதை தீர்­மா­னிக்க வேண்டும்.!

Published By: Robert

10 Apr, 2018 | 08:52 AM
image

ஐக்­கிய தேசிய கட்சி மாத்­திரம் தேசிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­க­வில்லை . ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்­களின் பங்­க­ளிப்­பு­ட­னேயே ஆட்சி அதி­காரம் காணப்­ப­டு­கின்­றது என  அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

எமக்கு எதி­ரான கருத்­துக்­களை தெரி­விக்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் தாம் வந்த பாதையை  மறந்து செயற்­பட கூடாது. தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வதா இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார். 

சுக­த­தாஸ விளை­யாட்டு மைதா­னத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர்  தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த 60 வரு­ட­கா­ல­மாக ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் பாரிய முரண்­பா­டுகள் காணப்­பட்­டன. இதன் கார­ண­மாக பல தேசிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் தோல்­வி­யினை கண்­டன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­னைந்து தேசிய அர­சாங்­க­மாக நாட்டின் நிர்­வா­கத்­தினை முன்­னெ­டுத்து செல்­வது சிறப்­பான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

தேசிய அர­சாங்­கத்­தினை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினை தனி­மைப்­ப­டுத்தும் கருத்­துக்­களை பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் பின்னர் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

ஐக்­கிய தேசிய கட்சி மாத்­திரம் தேசிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­க­வில்லை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்கள் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வினை அடிப்­ப­டை­யாக கொண்டே தேசிய அர­சாங்கம் தோற்றம் பெற்­றது  என்ற விட­யத்­தினை மறந்­து­விடக் கூடாது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 6 உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­யதன் பின்னர் இரண்டு கட்­சி­களும் தொடர்ந்து செயற்­ப­டுமா என்ற சந்­தேகம் தோற்றம் பெற்­றுள்­ளது. பிணை­முறி விவ­கா­ரத்­தினை மையப்­ப­டுத்­தியே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­யமை எமது தனிப்­பட்ட விடயம்.  இதில் எவ்­வித கட்சி அழுத்­தங்­களோ, அர­சியல் உள்­நோக்­கங்­களோ கிடை­யாது.

தேசிய அர­சாங்­கத்தில் எனது பொறுப்பில் காணப்­பட்ட  விளை­யாட்­டுத்­துறை தற்­போது பாரிய முன்­னேற்­றத்­தினை அடைந்­துள்­ளது. கடந்த காலங்­களில் சில வரை­ய­றை­க­ளுக்­குட்­பட்ட நிலையில் காணப்­பட்ட விளை­யாட்­டுத்­துறை தற்­போது நாடு­த­ழு­விய ரீதியில் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை மறந்து செயற்பட கூடாது. தேசிய அரசாங்கம் தொடர்ந்த செயற்படுமா என்ற விடயத்தினை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50