(இராஜதுரை ஹஷான்)

எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்துக்  கொண்டு அரசாங்கத்திற்கு  ஆதரவாக  இரா. சம்பந்தனும் அவரது கட்சி  சகாக்களும் செயற்படுகின்றனர். எனவே எதிர்கட்சி தலைவர் என்பதை விட புதிய அமைச்சரவையில் அமைச்சர் என்பது இவருக்க பொருத்தமாகவே காணப்படும் என  பாராளுமன்ற உறுப்பிணர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Image result for வாசுதேவ நாணயக்கார

தேசிய அரசாங்கத்தில் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நியமித்தமை பாராளுமன்ற பாரம்பரிய முறைமைகளுக்க முரணானதாகவே காணப்படுகின்றது. 2015ம் ஆண்டு தொடக்கம் பிரதமருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும் ஆதரவாக செயற்பட்டு அரசாங்கத்தின் பங்காளியாக எதிர்கட்சி தலைவர் இடம் பிடித்துள்ளமை எதிர்கட்சி பதவிக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் பதவியை தம்சப்படுத்திக் கொள்ளும் போட்டியை மஹிந்த தரப்பினர் மீண்டும் ஆரம்பித்துள்ளமை தொடர்பில்  தெளிவுப்படுத்தும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.