(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முக்கியமான அரச திணைக்களங்களுக்கு தமிழ் பேசும் மக்களை மாத்திரம் நியமிக்க வேண்டும். என்கின்ற எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் கருத்தானது  பிற இனங்கள் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பினை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர,

Image result for அட்மிரல் சரத் வீரசேகர virakesari

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. பிரேரணையினை காரணம் காட்டி 10 நிபந்தனைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்கட்சி தலைவர் எதிராக ஆதரவு வழங்கியமை அவரது பதவிக்கு பொருத்தமற்றது என குறிப்பிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.