இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற இளைஞர் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

குறித்த இளைஞர் மலையில் சென்று கொண்டிருந்த போது  ஒரு கட்டத்தில் செல்பி எடுக்க முடிவு செய்து ஒரு பள்ளத்தின் விழும்பில் நின்று கொண்டு செல்பி எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து  உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயல்பட்டு இளைஞரை  பள்ளத்தில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.