பொகவந்தலாவ - பொகவானை தோட்டபகுதில் 5ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் இன்று காலை 9 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலை தேயிலை மலையின் அடிபகுதில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து  தாக்கியதாக பாதிக்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் .

குளவி கொட்டுக்கு இலக்கான 10பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்கள் குறித்த கவலையடைய தேவையில்லையென வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.