ஆப்கனிஸ்தானில் நேற்று அந்நாட்டு இராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஜாஸ்வான் மாகாணத்திற்குட்பட்ட டார்ஸ் ஆப் மாவட்டத்தில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதிகளுல் ஒருவரான காரி ஹெக்மாட் பதுங்கி இருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் காரி ஹெக்மாட் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. 

காரி ஹெக்மாட் முதலில் தலிபான் அமைப்பில் இருந்துள்ளார். அதிலிருந்து பிரிந்து கடந்த ஆண்டு ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.

காரி ஹெக்மாட் மரணமடைந்ததையடுத்து புதிய தளபதியாக மவ்லாவி ஹபிப் உர் ரஹ்மான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.