காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தன்னுடைய கணவர் தன்னை ஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி  கொடுமை செய்வதாக பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தியா - கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்த பெண்  காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டுள்ளார் . காதல் திருமணத்தின் மூலம் தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந் நிலையில் குறித்த பெண் சமீபத்தில் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். 

முறைப்பாட்டில்,

தன்னுடைய கணவர் தன்னை அடிக்கடி ஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி  கொடுமை செய்வதாகவும், மேலும் கணவரின் நடவடிக்கையில் சில மாதங்களாக மாற்றம் தெரிவதாகவும், அவர் இன்னொரு இளம் பெண்ணை தனக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை அடிக்கடி ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமைப்படுத்துவதகவும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டின்  மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.