மும்பையில் நடைபெற்றுவரும் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி மேடை யில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிர்கான் ஆகியோர் இதன்போது மேடையில் இருந்தனர். ஆயினும், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல் லப்பட்டனர்.

மும்பையில் பாந்த்ராகுர்லா கொம்ப் ளெக்ஸில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் ஆரம்பித்து வைத்தார். இது எதிர்வரும் 18 ஆம் திகதி வரைநடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.