உள்ளக முரண்பாடுகள் வேண்டாம்

19 Nov, 2015 | 02:48 PM
image

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை ஊட­கங்­களில் பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு­மென தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.

Mavai

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் பரஸ்­பரம் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அவற்றை நியா­யப்­ப­டுத்­தியும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு வெளியிட்டு வரும் கருத்­துக்­களால் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் குறித்து வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகி­ய­யோ­ருக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக ஊடங்­களில் இரு­வரும் பரஸ்­பரம் கருத்­துக்­களை வௌியிட்டு விவாதம் நடத்தி வரு­கின்­றார்கள்.

தற்­போதைய நிலையில் இவ்­வாறு ஊட­கங்­களில் பகி­ரங்க விவா­தங்­களை மேற்­கொள்­வது சாலப்­பொ­ருத்­த­மா­ன­தொன்­றல்ல. அவர்கள் தமக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி அதற்­கு­ரிய தீர்வைக் காண­வேண்டும்.

அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை கட்­சி­யினுள் அல்­லது அமை­தி­யான முறையில் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். எதிர்­வரும் நாட்­களில் இவர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்­பாக கட்­சியினுள் கலந்­து­ரை­யாடி தீர்­வினை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

மேலும் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ்­நி­லை­யில் நீண்­ட­கா­ல­மாக நீடித்து வரும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைப் பெற்­றுக்­கொள்ளல், பாதிக்­கப்­பட்ட தரப்­பா­கிய எமது மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுத்தல், உரி­மைகள்,அபி­லா­ஷை­களைப் பெற்று பாது­காப்­பான சமு­க­மாக எதிர்­கா­லத்தில் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்­கு­ரிய நிரந்த சூழலை ஏற்­ப­டுத்தல் போன்ற பல்­வேறு விட­யங்­களில் நாம் கவனம் செலுத்தி அதற்­கு­ரிய முன்­ன­கர்­வு­களைச் செய்­ய­வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் மேற்­ப­டி­யான உள்­ளக கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக மீண்டும் மீண்டும் விவா­திப்­பது சாலப்­பொ­ருத்­த­மற்­ற­தாகும்.

ஆகவே இவ்­வா­றான உள்­ளக முரண்­பா­டு­களை உரிய பேச்­சு­வார்த்தை ஊடாக தீர்ப்­ப­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். நாம் அதற்­கு­ரிய வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் நாட்­களில் எடுக்­க­வுள்ளோம் என்றார்.

வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கட்சி வரை­மு­றை­களை மீறி நடந்தார். ஆகவே அவரை கட்­யி­லி­ருந்து நீக்­கு­மாறு தலை­வ­ரி­டத்தில் கோரியுள்ளேன் உட்பட முதல்வர் குறித்த பல்வேறு கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று முன்தினம் விளக்கமளிக்கும் விரிவான ஊடக அறிக்கையொன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளி யிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00