மத்திய கிழக்கிற்கு செல்லும் பெண்களுக்கு 3 மாதகால கருத்தடை : வெளியாகியது புதிய தகவல்

Published By: Priyatharshan

06 Apr, 2018 | 03:36 PM
image

மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை பெண்களை கருத்தடைமாத்திரைகளை பயன்படுத்துமாறு வேலைவாய்பு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்களை மேற்கோள்காட்டி ”கார்டியன்” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களை இலக்குவைக்கும் முகவர்கள் அவர்களை கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

நாங்கள் அனுப்பும் பெண் மூன்று மாத காலத்திற்கு கர்ப்பம்தரிக்கமாட்டார் என்ற உத்தரவாதத்தை தாங்கள் வழங்குவதாக இலங்கை வேலைவாய்பபு பணியகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட ஆறு முகவர் நிறுவனங்களை  சேர்ந்தவர்கள்  கார்டியனிடம் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கிற்கு வேலைக்காக பெண்ணொருவரை அனுப்புவதற்கு முன்னர் அரசாங்கம் மருத்துவ பரிசோதனையொன்றை நடத்தும் அதன் முடிவுகளில் யாரும் தலையிட முடியாது என  தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்னர் நாங்கள் ஒரு சாதனத்தை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார்

உங்களிற்கு அது தேவையென்றால் நான் அதனை ஏற்பாடு செய்து தருகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து எந்த பெண்மணியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க முன்வராத அதேவேளை, மூன்று மாத காலத்திற்கு கருத்தரிப்பதை தடுக்ககூடிய டெப்போ புரோவரா என்ற ஊசியை பல முகவர் நிறுவனங்கள் பயன்படுத்துவது கார்டியனின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தொடர்பான அரச சார்பற்ற அமைப்பான மைகிரன்ட் நெட்வேர்க்கின் ஒருங்கிணைப்பாளரான ராகினி பாஸ்கரன் எப்படியாவது வேலை கிடைக்கவேண்டும் என்ற நிலையில் உள்ள பெண்கள் அவர்களை வேலைக்கு தெரிவுசெய்பவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளை  மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கின்றனர் என குறிப்பிட்டார்.

அனேகமான பெண்களிற்கு இந்த ஊசிகள் குறித்து எதுவும் தெரியாது அவர்களிற்கு முகவர்கள் இது குறித்து தெரியப்படுத்துவதும் இல்லை எனவும் ராகினி பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்த கருத்தடை மாத்திரைகள் இரு நோக்கங்களை பூர்த்தி செய்கின்றன முகவர்களின் பாலியல் துஸ்பிரயோகங்களை மறைக்க இவை உதவுகின்றன  மேலும் மூன்று மாதத்திறகு இந்த பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களிற்கு வழங்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருமணம் செய்யாதபெண்களும் விதவைகளும் கணவன்மார்கள் மாற்றுத்திறனாளிகளாக மாறிவிட்ட நிலையில் உள்ள பெண்களுமே இவ்வாறான துஸ்பிரயோகத்திற்கு பலியாகின்றனர்.

இவ்வாறான பெண்கள் எதிர்கொள்ளும் துஸ்பிரயோகங்களிற்கான உதாரணமாக சரோஜாவின் அனுபவம் காணப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டு வடபகுதியிலுள்ள உள்ள அந்த கிராமத்திற்கு சென்ற நபர் ஒருவர் வேலை வாய்ப்பை பெற்றுதருவதாக உறுதிமொழி வழங்கினார்.

அவர்கள் என்னைத் தேடி வந்தனர் நான் வெளிநாடு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும் குடும்பத்தை சிறந்த முறையில் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர் என சரோஜா தெரிவித்தார்.

சரோஜாவின் மகன் நோயாளி, உள்நாட்டு போர் காரணமாக கணவர் மாற்றுத்திறனாளியாக மாறியிருந்தார் அவரது ஐந்து சகோதரிகள் விதவைகள், இந்த நிலையில் அவரே குடும்பச்சுமையை சுமந்தார் இதன் காரணமாக அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார், அவர் தன்னிடமிருந்த நகையை விற்று முகவர் நிறுவனத்திற்கு 200 டொலர்கள் செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி சவுதிஅரேபியாவிற்கு வேலைக்கு சென்றார்.

அங்கு 12 பேர் கொண்ட குடும்பத்திற்கு சமைப்பது உட்பட ஏனையவேலைகளை பார்க்கவேண்டிய நிலைக்கு சரோஜா நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அவரை வேலைக்கு அமர்த்தியவர்கள்  ஒழுங்காக சம்பளம் வழங்காததன் காரணமாக இலங்கையில் உள்ள தனது குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியாதநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

நான் அது குறித்து எனது முதலாளியிடம் கேள்வி எழுப்பிய வேளை அவர் என்னை மிருகத்தனமாக தாக்கினார் என சரோஜா தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18